புராதன சின்னங்களை தூய்மைப்படுத்தும் பணி - தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு...
மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களில் உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் மீது கடலின் உப்புக்காற்றால், அரித்து, சிறு துளைகள் ஏற்பட்டு அசுத்தங்கள் ஏற்படுவதால், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொல்பொருள் துறை சார்பில் ரசாயண கலவை மூலம் உப்பு படிமங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களில் உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. வேதியியல் பிரிவு வல்லுநர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணியில், உப்பு படிமங்களை அகற்ற காகித கூழுடன் சிலிகன் பாலிமர் ரசாயனக் கலவை கலந்து பூசப்படுகிறது. பாதிப்பை பொறுத்து, 15 நாட்களுக்கு இந்த பணி நடைபெறும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.