நெகட்டிவ் மார்க் முறையை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்

போட்டித் தேர்வுகளில் நெகட்டிவ் மதிப்பெண் முறையை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2019-02-01 22:25 GMT
ஐஐடி நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத நெல்சன் என்ற மாணவர், மறு மதிப்பீடு செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அதில், பிரதான தேர்வில் 50 எடுக்க வேண்டிய நிலையில் 47 மட்டுமே எடுத்ததால் அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தனது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கை 2013-ம் ஆண்டு விசாரித்த நீதிபதி சசிதரன், மாணவன் நெல்சனை அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கவும் விடைத்தாளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கனடா, ஜெர்மனி போன்ற கல்வியில் முன்னேறிய நாடுகளில் கூட நெகடிவ் மார்க் முறை பின்பற்றப்படவில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி, மனுதாரர் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சிபிஎஸ்சி மற்றும் பிற போட்டி தேர்வுகளில் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்