மீண்டும் ஊருக்குள் புகுந்த சின்னதம்பி யானை
கோவை அருகே வலம் வந்த யானை சின்னதம்பி மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
சோமையனூரில் இருந்து காடுகடத்தப்பட்ட சின்னதம்பி, மலையிறங்கி அங்கலக்குறிச்சி, கோட்டூர் உள்ளிட்ட பகுதியில் இணையை தேடி அலைந்தது. அதன் கழுத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதால், யானை செல்லும் பாதையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். இதையடுத்து 30 வனத்துறையினர், மூன்று குழுவாக பிரிந்து, யானையின் வழித்தடத்திற்கு சென்றனர். அங்கு பட்டாசு வெடித்தும், அதிக சத்தம் எழுப்பியும் சின்னதம்பி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.