சென்னையின் நீராதாரமாக மாறிய சிக்கராயபுரம் கல்குவாரி - தண்ணீர் எடுக்க குழாய் அமைக்கும் பணி தீவிரம்

கோடைகாலத்தில் சென்னையின் தாகம் தீர்க்கும் சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் எடுக்க ஏதுவாக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

Update: 2019-01-30 20:29 GMT
மழை குறைந்ததால், சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும், சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் வற்றத் தொடங்கிவிட்டன. ஆங்காங்கே மண்மேடு தெரியும் அளவுக்கு ஏரிகளின் நிலை கவலைக்கிடமாகியுள்ளன. கோடையில் இந்த நிலைமை அதிகரிக்கும் என்பதால், 2017-ம் ஆண்டைப் போல், தற்போதும் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகளில் தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொக்லைன் மூலம் சரிவு ஏற்படுத்தி, உடைந்த குழாய்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாகியுள்ளன.  
Tags:    

மேலும் செய்திகள்