மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் - மாலிக் பெரோஸ்கான் , தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்
மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்துள்ளார்.
மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் நடைபெற்ற ஆட்சியர் தேர்தல் ஆயத்த பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மே மாத இறுதியில் வெளியிடப்படும் என்றார். நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.