"ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது" - அமைச்சர் ஜெயக்குமார்
"பணிக்கு திரும்பாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை"
ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்க இயலாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் கல்விக்கும், மக்கள் பணிக்கும் இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களை கைவிட்டு அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.