தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 8-ஆம் கட்ட விசாரணை
"பிப். 18 - 21 வரை விசாரணை நடைபெறும்" - விசாரணை ஆணைய வழக்கறிஞர் தகவல்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 8-ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெறும் என விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 -ம் கட்ட விசாரணையில், இதுவரை 155 பேரிடம் விசாரணை நடைப்பெற்று உள்ளதாகவும், மேலும் 700 பேர் வரை விசாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடைபெறும் எனவும் விசாரணை ஆணைய வழக்கறிஞர் கூறினார்.