விரைவில் சிறைவாசிகளால் இயங்கும் பெட்ரோல் நிலையங்கள் : சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி விளக்கம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில், கைதிகள் சாதி ரீதியாக பிரித்து அடைக்கப்படவில்லை என சிறைத்துறை துணை தலைவர் பழனி விளக்கியுள்ளார்.

Update: 2019-01-24 13:53 GMT
தமிழகத்தில் முதன் முறையாக நன்ன‌டத்தை அடிப்படையில், ஆயுள் தண்டனை பெற்றுள்ள சிறைவாசிகள் மூலம் இயக்கப்படும் பெட்ரோல் நிலையங்கள் நெல்லையில் தொடங்கப்பட உள்ளன. இதற்காக சிறைவாசிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அரசுடன் இணைந்து, பெட்ரோல் நிரப்புவது, வாடிக்கையாளரிடம் பழகுவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சியை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி தொடங்கிவைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாளையங்கோட்டை சிறையில் சாதி ரீதியாக கைதிகள் பிரித்து அடைக்கபடுவதில்லை எனவும், இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்