இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் எந்த தகுதியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-01-22 19:42 GMT
* தொடக்கக்கல்வித் துறையின் இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

* இந்த மனுவை விசாரித்த  நீதிபதி சுப்பிரமணியன்,  இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான தகுதிகள் என்ன?  கடந்த 5 ஆண்டுகளாக எந்த தகுதியின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடைபெற்றது? எனவும் கேள்வி எழுப்பினார். 

* எத்தனை இடைநிலை ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து  தமிழக அரசிடம் உரிய தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்