கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி : லாக்கரை உடைக்க முடியாத தால் நகைகள் தப்பின
திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையம் அருகே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமயபுரம் கிளை செயல்படுகிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையம் அருகே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமயபுரம் கிளை செயல்படுகிறது. இந்த வங்கி கிளையை இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் நிலையில், தொடர் விடுமுறையை பயன்படுத்தி மர்மநபர்கள் வங்கி சுற்றுச்சுவரை மற்றும் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தைத் திருட முயன்றுள்ளனர். வங்கியின் லாக்கரை உடைக்க முடியாமல் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகை தப்பியுள்ளது. இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக வழக்குப் பதிந்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.