காணும் பொங்கல் சென்னையில் பாதுகாப்பு தீவிரம்

நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுவதை யொட்டி, சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Update: 2019-01-16 12:23 GMT
கிண்டி சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம், 
தீவுத்திடல், உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மெரீனா கடற்கரையை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில், 12 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

கடற்கரை முழுவதும்,10 குதிரையில், காவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

கடலுக்குள் மக்கள் இறங்காமல் தடுக்க கட்டைகளை கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில்  குழந்தைகள் கடத்தலை தடுக்க 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மெரினாவில், 8 மெகா கேமராக்களுடன் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட்டு,  குற்றவாளிகளை அடையாளம் காணும் பேஸ் டிடெக்‌ஷன் கேமராவும் பயன்படுத்தப்பட உள்ளது.
இதேபோல ஆளில்லா விமானம் மூலமும் கண்காணிக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல, மாமல்லபுரம் கடற்கரையிலும் ஐநூறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் . . கடலில்  குளிக்க தடை விதிக்கப்பட்டு, தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் வசதிக்காக கடற்கரயில் தற்காலிக கழிப்பறை வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்