சென்னையைக் கலக்கப் போகும் 'ரோபோ' போலீஸ் : போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய முயற்சி
சென்னையைக் கலக்கப் போகும் 'ரோபோ' போலீஸ் : போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய முயற்சி
சென்னை என்றால் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது டிராஃபிக் தான்.. மக்கள் தொகை உயர உயர போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. போக்குவரத்து காவலர்கள் ஆங்காங்கே இருந்தாலும், நெரிசலை சமாளிக்க முடியவில்லை. இதற்கு தீர்வு காண சென்னை மாநகர காவல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரோபோக்களை, போக்குவரத்து காவல் பிரிவில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தற்போது சென்னை மாநகர காவல் அலுவலகத்தில் பிரத்யேக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ரோடியோ என்ற ரோபோ காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், சாலையை எளிதாக்க கடக்க உதவுவது, ஆம்புலன்ஸ் வரும் போது வழிவிட சொல்வது, வாகனங்களை கண்காணிப்பது போன்ற பல்வேறு பணிகளை இந்த ரோபோக்கள் செய்யவுள்ளன. இதற்காக இன்னும் பல ரோடியோ வகை ரோபோக்கள் தயாரிக்கப்படவுள்ளன.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த ரோபோ போலீஸ் மூலம், போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.