பாலாற்று நீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை : வாயலூர் பாலாற்றில் புதிய தடுப்பணை
பாலாற்று நீர் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் வாயலூர் பாலாற்றில் தடுப்பணை கட்ட, கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
* காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் பாலாற்றில் தடுப்பணை வசதி இல்லாததால் ஆற்று நீர் கடலில் கலந்து வருகிறது. இதனால் விவாசாயிகள் கடந்த பல வருடங்களாக, விவசாயம் செய்ய நீராதாரமின்றி தவித்து வந்தனர்.
* இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த 40 கிராம விவசாயிகளும், வாயலூர் பாலாற்றில் தடுப்பணை கட்டுமாறு என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
* இந்நிலையில், பொதுப்பணித் துறையின் பரிந்துரையின் பேரில் கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம், வாயலூர் பாலாற்றில் தடுப்பணை கட்டி கொடுக்க முன் வந்துள்ளது. அதற்காக 32 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளது.