3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் - முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மேல் முறையீடு
பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சென்னை - உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சென்னை - உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். எம்பி- எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த தீர்ப்பினால், பாலகிருஷ்ண ரெட்டி, அமைச்சர் பதவியை பறிகொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.