தனியார் சுண்ணாம்பு சுரங்கத்திற்காக நீர்வழிப்பாதையில் சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, நீர் வழிப்பாதையில் சாலை அமைக்கக் கூடாது என அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், விசாரணை அதிகாரியின் காலில் விழுந்து கதறி அழுதார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, நீர் வழிப்பாதையில் சாலை அமைக்கக் கூடாது என அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், விசாரணை அதிகாரியின் காலில் விழுந்து கதறி அழுதார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்காக, இலங்கைச்சேரி கிராமத்தில் உள்ள நீர்ப்பாதை வழியே சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் உயர்நீதிமன்றத்தை அணுகியதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்தில் கள ஆய்வு செய்ய வர்ஷா என்பவரை ஆணையராக நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இலங்கைச்சேரி பகுதியில் விசாரணை ஆணையர் வர்ஷா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஒரு பெண், நீர் வழிப்பாதையில் சாலை அமைக்காதீர்கள் என கூறி ஆணையரின் காலில் விழுந்து கதறி அழுதார்.