பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு மதுபானமே காரணம் - உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அரசு மதுபான கடைகளே காரணம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்க்கு 4 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது சாராயம் என்று குறிப்பிட்ட நீதிபதி கிருபாகரன், ஆனால் அதை அரசே விற்பதாக விமர்சித்தார். குடும்பங்களில் நடைபெறும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய நீதிபதி கிருபாகரன், மாமியார், மருமகள் இணக்கமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தனிக்குடும்பம் என்ற நிலையிலிருந்து மாறி கூட்டுக்குடும்பம் என்ற நிலை திரும்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் மகளிர் நீதிமன்றங்கள் குறைகின்றதோ அப்போதுதான் நல்ல சமூகம் உருவாகியுள்ளது என்று அர்த்தம் என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.