அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகள் தீவிரம் : 2250 கிலோ வடை மாவில் பிரம்மாண்ட மாலை
நாமக்கல்லில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர அனுமன் சிலை அமைந்த கோவிலில், வருகிற சனிக்கிழமை ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
நாமக்கல்லில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர அனுமன் சிலை அமைந்த கோவிலில், வருகிற சனிக்கிழமை ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மடப்பள்ளியை சேர்ந்த 30 பேர் கொண்ட குழு, நாமக்கல் வந்து, வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்கப்பட உள்ளதாகவும், இதற்காக 2 ஆயிரத்து 250 கிலோ வடை மாவு, 650 கிலோ நல்லெண்ணெய், 35 கிலோ சீரகம், 35 கிலோ மிளகு, 35 கிலோ உப்பு பயன்படுத்தப்படுவதாக, ஸ்ரீரங்கம் மடப்பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.