அரசியல்வாதிகள் படையெடுக்கும் ஆலயம் - அடிப்படை வசதிகள் செய்யப்படாத அவலம்

கரூர் அருகே, அரசியல்வாதிகள் மட்டுமின்றி பல முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் கோவில் ஒன்று, அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Update: 2019-01-01 19:47 GMT
கரூர் அருகே, அரசியல்வாதிகள் மட்டுமின்றி பல முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் கோவில் ஒன்று, அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கரூர் மாவட்டம் நெரூர் என்ற கிராமத்தில் காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பின்புறம் மகான் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டு காலம் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழ்ந்ததாக கூறப்படும், இந்த மகானின் ஜீவசமாதிக்கு, அரசியல்வாதிகள் மட்டுமின்றி பல முக்கிய பிரமுகர்களும் வந்து செல்கின்றனர்.  பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆனால் இங்குள்ள பூங்கா மற்றும் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல், இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். உடனடியாக அவற்றை சீரமைத்து, பக்தர்கள் தங்கி செல்வதற்கு வசதியாக ஓய்வறைகள் மற்றும் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், காவிரி ஆற்றில் படித்துறை கட்டித்தர அரசு முன்வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்