வெளிநாடுகளுக்கு நிகரான சாலை வசதிகள்...

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னை விரைவில் வெளிநாட்டிற்கு நிகரான சாலை வசதிகள் பெற்று, சீர்மிகு சென்னையாக உருவாக உள்ளது.

Update: 2018-12-31 04:22 GMT
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பத்து மாநகரங்களில், பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சீர்மிகு சென்னை என்ற திட்டத்தின்படி, 500 கோடி ரூபாய் மதிப்பில் வெளி நாடுகளுக்கு நிகரான சாலை மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 28 திட்டங்களுக்கு டெண்டர்கள் கோரப்பட்டு, வேலைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக ஆளில்லா விமானங்கள் மூலம் புவிசார் குறியீடுகள் கொண்ட வரைபடம் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தி.நகர் போன்ற எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அகல சாலைகள், நடைபாதைகள், கார் பார்க்கிங் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்