சேவல் சண்டைக்கு விதிக்கப்பட்ட தடை ஜல்லிக்கட்டை போல் நீக்கப்படுமா ? - காத்திருக்கும் சேவல் வளர்ப்பாளர்கள்

சேவல் சண்டைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையின் காரணமாக சண்டை சேவல்கள் களம் காணமுடியாமல் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளன.

Update: 2018-12-30 19:21 GMT
சேவல் சண்டைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையின் காரணமாக சண்டை சேவல்கள் களம் காணமுடியாமல் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளன.   ஜல்லிக்கட்டு போட்டியை போல சேவல் சண்டைக்கும் தடை நீக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர், சேவல் வளர்ப்பாளர்கள். சேவல் சண்டை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடத்தப்பட்டு வந்த ஒரு விளையாட்டாகும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்த சேவல் சண்டைகள் நடத்தப்படுவது வழக்கம்....

அரசு அனுமதியுடன் நடத்தப்பட்டு வந்த சேவல் சண்டை போட்டிகள், ஒருகட்டத்தில்  சூதாட்டமாக மாறிவிட்டதாக  புகார் எழுந்த்து..  இதனையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது. 

இதனால் சேவல் வளர்ப்பவர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். சண்டை கோழிகளை செல்ல பிராணிகளாக மட்டும் எண்ணாமல், தங்களது பிள்ளைகளாக பாவித்து வளர்த்து வந்ததாகவும், தடையின் காரணமாக பாசத்துடன் வளர்க்கப்பட்ட சேவல்கள் அழிந்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இத்தகைய தடையால் தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் ஒவ்வொன்றாக அழியும் சூழலுக்கு சென்றுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு போல சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தடை நீக்கப்பட்டு மீண்டும் சேவல் சண்டைகள் நடத்தப்படும் என்ற கனவில் சேவல்களை தொடர்ந்து பராமரித்து வருகின்றனர், சேவல் வளர்ப்பவர்கள்.
 
Tags:    

மேலும் செய்திகள்