தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 2-ல் தொடங்குகிறது

வரும் ஜனவரி இரண்டாம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.

Update: 2018-12-26 10:04 GMT
*  தமிழக அளுநர் பன்வாரி லால் புரோகித் வரும் ஜனவரி 2 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரை கூட்டும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.  ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்குகிறது. 
 
* ஜனவரி 2 ந்தேதி   மாலை நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். முதல் நாள் கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் போஸ் ஆகியோருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்படும்.  இந்த கூட்டர் தொடரில் மேகதாது, ஸ்டெர்லைட் மற்றும் கஜா புயல் சீரமைப்பு  மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்ப திட்டமிட்டு வரும் நிலையில், அதனை எதிர்க்கொள்ள ஆளும் அ.தி.மு.க. தரப்பும் தயாராகி வருவதாக வருகிறது. இதனிடையே, ராமசாமி படையாட்சியர் உருவப் படம் இந்த கூட்டத் தொடரில் பேரவையில் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்