தமிழாய்வுக்கு முடிவே இல்லை - தஞ்சை பல்கலை.துணைவேந்தர் பேச்சு

தமிழாய்வுக்கு முடிவே இல்லை என்றும் அதிக அளவில் தமிழ் ஆய்வு நிறுவனங்கள் வரவேண்டும் எனவும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்ரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2018-12-22 07:11 GMT
தமிழாய்வுக்கு முடிவே இல்லை என்றும் அதிக அளவில் தமிழ் ஆய்வு நிறுவனங்கள் வரவேண்டும் எனவும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்ரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். கும்பகோணத்தில் தமிழாய்வு அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது. இதனை தொடக்கி வைத்து பேசிய பாலசுப்பிரமணியன், தற்போது குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்கப்படுவது குறைந்து வருவதாகவும், வீட்டில் குழந்தைகளுடன் ஆங்கிலத்தில் பேசும் சூழல் நிலவுவதாகவும் வேதனை தெரிவித்தார். தமிழாய்வுக்கு முடிவே இல்லை என்றும் எத்தனை நிறுவனங்கள் வந்தாலும் எத்தனை பேர் ஆய்வு செய்தாலும் அதற்கு எல்லையே இல்லை என்றும் அவர் கூறினார்.  தமிழ் மொழி ஆய்வுக்கான நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வர வேண்டும் என்றும் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.  பிற மொழிகளில் தமிழர்களைப் பற்றியும் தமிழ் பண்பாட்டை பற்றியும் எழுதிய நூல்களை தமிழில் மொழிபெயர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்