உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் - மத்திய அரசின் உத்தரவுக்கு ஸ்டாலின், நாராயணசாமி எதிர்ப்பு
தனிநபர் கம்ப்யூட்டர்கள் மற்றும் செல்போன்களில் தகவல்களை ஊடுருவி பார்ப்பதற்கு, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் கம்ப்யூட்டர்கள் மற்றும் செல்போன்களில் தகவல்களை ஊடுருவி பார்ப்பதற்கு, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்துள்ள இந்த அனுமதிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது சமூக வலைதளத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதுபோல, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், விசாரணை அமைப்புகளுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கியது, மத்திய அரசின் சர்வாதிகாரபோக்கு என விமர்சித்துள்ளார்.