வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றலாம் - மதிப்பீட்டு குழு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மட்டுமே மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவி்த்துள்ளதாக, சமூக தாக்க மதிப்பீட்டு குழு தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதால் ஏற்படும் சமூக தாக்கம் குறித்து அறிய,
* பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம், டிசம்பர் 8ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.
* இதனையடுத்து பொதுமக்களின் கருத்துக்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த சமூக தாக்க மதிப்பீட்டு குழு, அதை அரசிடம் சமர்பித்தது.
* அதில், பூட்டப்பட்டு கவனிப்பின்றி உள்ள வேதா நிலையத்தை தமிழக அரசு உரிய மரியாதையுடன் நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் என்றும்,
* நினைவிடத்தோடு பெண்கள் ஆளுமைக்கான திட்டங்களையும் செயல்படுத்த வேதா நிலையத்தை பயன்படுத்தலாம் எனவும்,
* நினைவிடமாக மாற்றுவதற்கு பதிலாக வேறு எதாவது சமூக திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து சமூக தாக்க மதிப்பீட்டு குழு வெளியிட்ட அறிக்கையில்
* வேதா நிலையத்தில் எந்த ஒரு நபரும் வசிக்காத காரணத்தால் குடும்பங்கள் இடம் பெயருதல் என்ற பிரச்னைக்கு இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மேலும் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது எனவும்
* குழுவின் ஆய்வின் படி சமூகத் தாக்கம் என்பதற்கு இடமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
* இத்திட்டத்தால் மாசு மற்றும் மாசுபாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தேவை இல்லை எனவும் ஏற்கனவே நில எடுப்பு செய்யப்பட்டுள்ளதால் உபரியாக காலியிடம் எதுவும் இல்லை என்றும் மதிப்பீட்டு குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது
* மறைந்த முதலமைச்சரின் இல்லத்தை தவிர வேறு இடத்தினை நினைவு இல்லமாக மாற்றுவது இதுவரை பின்பற்றி வந்த முறைகளுக்கு மாறாக அமையும் எனவும் அந்த அறிக்கையில் மதிப்பீட்டு குழு தெரிவித்துள்ளது.