ரூ. 388 கோடியில் முக்கொம்பில் புதிய அணை

திருச்சி - கொள்ளிடம் ஆற்றின் முக்கொம்பில், இடிந்த மேலணைக்கு பதிலாக 388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2018-12-17 16:11 GMT
திருச்சி - கொள்ளிடம் ஆற்றின் முக்கொம்பில், இடிந்த மேலணைக்கு பதிலாக 388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை , ஆகஸ்டு மாதங்களில் காவேரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக உபரி நீரை வெளியேற்றிய போது, ஆகஸ்ட் 22 ம் தேதி, 9 கதவணைகள் உடைந்தன. 1836 - ல் சர் ஆர்தர் தாமஸ் காட்டன் என்ற இங்கிலாந்து பொறியாளரால் கட்டப்பட்ட 182 ஆண்டு பழமை வாய்ந்த மேலணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். இதன்படி, தற்போது, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த புதிய அணையில் இருந்து 2 லட்சத்து 83 ஆயிரம் கன அடி நீரை பாதுகாப்பாக வெளியேற்ற முடியும்.  இதுதவிர, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 12 லட்சத்து 58 ஆயிரத்து 460 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்