"எல்லாருக்கும், அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும்" - நடிகை கவுதமி கோரிக்கை

பேருந்து செல்ல முடியாத கிராமங்களுக்கு அனைத்து விதமான மருத்துவ வசதிகள், பொதுமக்களை சென்றடைய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு நடிகை கவுதமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-12-12 11:28 GMT
பேருந்து செல்ல முடியாத கிராமங்களுக்கு அனைத்து விதமான மருத்துவ வசதிகள், பொதுமக்களை சென்றடைய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு நடிகை கவுதமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கும்பகோணத்தில் தொண்டு நிறுவனங்களின் சார்பில், நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தினசரி வாழ்வில், நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்களே, புற்றுநோய் வருவதற்குரிய வாய்ப்புகளை கொண்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும், அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மட்டும் செய்யாமல், மருத்துவ வசதிகளை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்