பள்ளி திறந்த 10 நாளில் மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
அடுத்தாண்டு முதல் பள்ளி திறந்த 10 நாளில் மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த உடனேயே வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும், இதனை மத்திய அரசு பாராட்டி உள்ளதாகவும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கூகலூரில் உள்ள காந்தி கல்வி நிலைய மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசும் போது அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்தார். அடுத்தாண்டு முதல் பள்ளி திறந்த 10 நாளில் மிதிவண்டி மற்றும் மடிக்கணினி
வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.