அன்னிய செலாவணி மோசடி வழக்கு - சசிகலாவை டிச. 13-இல் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலாவை ஆஜர்படுத்துமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலாவை ஆஜர்படுத்துமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கப் பிரிவு பதிவு செய்தது. சசிகலா மீது 4 வழக்குகள் உள்ள நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக காணொளி காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், குற்றச்சாட்டு ஆவணத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட நடைமுறைகளுக்காக வருகிற 13ஆம் தேதியன்று சசிகலாவை ஆஜர்படுத்துமாறு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார்.