தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - மத்தியக் குழு

கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய குழு தெரிவித்துள்ளது.

Update: 2018-12-05 20:29 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு கூடுதல் நிதி வழங்க மத்திய அரசுக்கு அறிக்கை மூலம் பரிந்துரை செய்யப்படும் என்று நாகை வந்துள்ள மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் கோவில் பத்து, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் பகுதிகளில் சேதமடைந்த தென்னை, பனை, மா, முந்திரி உள்ளிட்ட பணப்பயிர்களை , மத்திய அரசின் இணை செயலாளர் தினேஷ் குமார் தலைமையிலான மத்திய குழுவினர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து  பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளையும் அவர்கள் கேட்டு அறிந்தனர். இந்த ஆய்வின் போது கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ்குமார், தஞ்சை திருவாரூர் நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.  விவசாயிகளின் மறுவாழ்வு மற்றும் , பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்புக்காக, மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க அறிக்கை மூலம் பரிந்துரை செய்யப்படும் என  தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்