ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் மூதாட்டியை ஏமாற்றிய மர்ம நபர்
சென்னையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து கொள்ளையடித்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை விருகம்பாக்கம் வெங்கடேச நகரை சேர்ந்த மூதாட்டி நாராயணி. இவர், அங்குள்ள விநாயகம் தெருவில், உள்ள வங்கி ஏடிஎம்மிற்குள் தமது கணவருடன் பணம் எடுக்க சென்றுள்ளார். கார்டு போட்டு பணம் எடுக்கும் போது பணம் வரவில்லை. அப்போது ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர், தாமாக முன் வந்து 3 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொடுத்து உதவியுள்ளார். பின்னர் நாராயணி அம்மாள், வீடு வந்தடைந்ததும் அவரது கணக்கில் இருந்து அடுத்தடுத்து, 7 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த நாராயணி அம்மாள், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான எழுபந்தைந்து வயதான நாராயணி தன் மருத்துவ செல்வுக்கான பணம் திருடு போனதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.