உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, வீடு வழங்க பரிசீலனை - அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு வேலை - இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-27 15:18 GMT
உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு வேலை - இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  மத்திய சுகாதாரத்துறை சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

உடல் உறுப்பு தானம் : தமிழகம் முதலிடம்

இதனிடையே, உடல் உறுப்பு தானத்தில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் 4 - வது முறையாக தமிழகம், இந்த விருதை தக்க வைத்துக்கொண்டுள்ளது. டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர்கள் அஸ்வினி குமார், அனுப்பிரியா பட்டேல் ஆகிய இருவரும் வழங்கிய விருதை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்