விழிப்புணர்வு பேரணியில் பாம்பு வித்தை காட்டிய பழங்குடி நாடோடி மக்கள்
மதுரை புதூர் பகுதியில் நாடோடி மக்கள் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தங்களது குழந்தைகளை மையமாக வைத்து தெருக்களில் ஆடிப்பாடி பேரணி நடத்தினர்.
புதூர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பழங்குடி நாடோடி இனத்தைச் சேர்ந்தவர்கள் சாதி சான்றிதழ், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கக்கோரி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். முன்னதாக அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், தங்களின் குலத்தொழில்களான ஆடிப்பாடுவது, பாம்பு வித்தை காண்பிப்பது, சர்க்கஸ், கூத்து, பொம்மலாட்டம், சாட்டை அடிப்பது உள்ளிட்டவற்றை செய்தனர்.