மேகதாது அணையில் முதல்கட்ட ஆய்வுக்கு அனுமதி - வாசன் கண்டனம்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில், அணை கட்ட முதற்கட்ட ஆய்வு நடத்த கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியதற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில், அணை கட்ட முதற்கட்ட ஆய்வு நடத்த கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியதற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தன்னிச்சையாக வழங்கியுள்ள அனுமதியை, ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.