டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை : தமிழக அரசை பாராட்டிய நீதிபதிகள்
டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டினார்கள்.
* டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், சுகாதாரத் துறை அதிகாரிகள், தற்போது நிவாரண பணியில் ஈடுபட்டிருப்பதால் டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் கோரினார்.
* இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அறிக்கை அளிக்க அவகாசம் வழங்கினார்கள். ஆனால், டெங்கு, பன்றிகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்படக் கூடாது என தெரிவித்த அவர்கள், வழக்கு விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.