கஜா புயலுக்கு ஈரோடு தனியார் நிறுவனம் சார்பில் 10 லட்சம் நிவாரணம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மக்களுக்காக, ஈரோட்டை சேர்ந்த தனியார் ஜவுளி நிறுவனத்தின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-27 07:50 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மக்களுக்காக, ஈரோட்டை சேர்ந்த தனியார் ஜவுளி நிறுவனத்தின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வேன்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஈரோடு ஆட்சியர் கதிரவன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். அரிசி, போர்வைகள், மெழுகுவர்த்தி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

கஜா புயல்- வணிகர் சங்கம் சார்பில் நிவாரணம்



'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, வணிகர் சங்கம் சார்பில், 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் மற்றும் துணிகள் அனுப்பி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூரில் இருந்து வணிகர் சங்கம் சார்பில், 5 கிலோ அரிசி, சர்க்கரை, கோதுமை,  மெழுகுவர்த்தி, போர்வை, சோப்பு என தலா 700 ரூபாய் மதிப்புள்ள பொட்டலங்களாக 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்