காவல்நிலைய ரோந்து வாகனங்கள் குறித்து பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

காவல்நிலைய ரோந்து வாகனங்கள் குறித்து பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-26 17:28 GMT
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அதன் பதிவாளர் தாக்கல் செய்த மனுவில் ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு முறையாக படி வழங்கப்படுவதில்லை என செய்தி வெளியானதாகவும்
காவலர்கள், தங்கள் ஊதியத்திலேயே ரோந்து வாகனங்களுக்கு செலவிடுவதாகவும் கூறியிருந்தார். உயர் நீதிமன்ற கிளை, தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய முடிவெடுத்த நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறையினர் லஞ்சம் பெறுவதாக அடிக்கடி புகார் எழும் சூழலில், இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் வாகனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், காவலருக்கு 200 ரூபாயும், துணை ஆய்வாளருக்கு 300 ரூபாயும் ரோந்துப் பணிக்காக வழங்கப்படுவதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, எத்தனை காவல் நிலையங்களுக்கு ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன? எந்த அடிப்படையில் ரோந்து படி வழங்கப்படுகிறது? என உள்துறை செயலரும் காவல்துறை தலைவரும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்