"பொறியியல் படிப்பு பருவத்தேர்வில் சீர்திருத்தம்" - அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு முடிவு
பொறியியல் கல்வி பருவத்தேர்வுகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு முடிவு செய்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தேர்வு சீர்திருத்தக் குழு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாணவர்களுடைய மன அழுத்தத்தை குறைப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சில பாடப்பிரிவுக்கு புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதக்கூடிய திட்டத்தை அமல்படுத்துவது எனவும் மூன்று மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தற்போது வரை பல்கலைக்கழகங்களுக்கு எந்தவிதமான உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் இந்த புதிய திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.