போலீசாருக்கு ஜெயலலிதா வழங்கிய இடம் குப்பை மேடாக காட்சியளிக்கும் அவலம்
போலீசாருக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய இடம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க உதவியதற்காக, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என 63 பேருக்கு, சென்னையில் 63 கிரவுண்ட் இடத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். நிலத்தை பெற்ற காவலர்கள் அனைவரும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் பெற்று வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் அந்த இடங்களை பார்க்க வந்த காவலர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில், சென்னை மாநகராட்சியால் குப்பைகள் கொட்டப்படுவதால், மலை போல குப்பை சேர்ந்து கிடக்கிறது. இது குறித்து காவலர்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்களும், அந்த இடத்தில் குப்பை கொட்டி வருவதால், தங்களுக்காக ஜெயலலிதா அளித்த நிலம், பயனில்லாமலேயே போகும் அவலம் ஏற்பட்டுள்ளதாக 63 காவலர்களும் தெரிவிக்கின்றனர். குப்பையாக கிடப்பதால், நிலத்தை விற்கவும் முடியவில்லை என வேதனையடைந்துள்ளனர்.