பல்வேறு தரப்பில் இருந்து குவியும் நிவாரணங்கள் : உதவிக்கரம் நீட்டும் நல்ல உள்ளங்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மக்களின் துயர் துடைக்க பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
நடிகர் விஜய் அனுப்பிவைத்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொண்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கினர்.
கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட 14 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் 16 ஆயிரம் கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, வேளாங்கண்ணி, தெத்தி, புத்தூர் மஞ்சக்கொல்லை பகுதி மக்களுக்கு வழங்கினார்.ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சையை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சங்கமும், அரசு ஊழியர் சங்கமும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.