சிங்கம்புணரியில் 2 வார்டில் செல்போன் டவர் அமைக்க இடைக்கால தடை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 2 வார்டுகளில் செல்போன் டவர் அமைக்க இடைக்கால தடைவிதித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
* சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தாக்கல் செய்த பொதுநல மனுவில்,சிங்கம்புணரி 12ஆவது வார்டில் சேவுகன் என்பவரது வீட்டில், உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி, செல்போன் டவர் வைக்கும் பணிகளை ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
* மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிங்கம்புணரி 10 மற்றும் 12ஆவது வார்டில் செல்போன் டவர் அமைக்கும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, செல்போன் டவர் அமைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். சிவகங்கை நகராட்சி ஆணையர், சிங்கம்புணரி காவல் ஆய்வாளர், ரிலையன்ஸ் நிறுவன சட்ட மேலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.