ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் முதல்வருடன் சந்திப்பு : 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை
ஹூண்டாய் நிறுவனம் 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் துவங்குகிறது.
ஹூண்டாய் நிறுவனம் 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் துவங்குகிறது.
இதனை ஒட்டி, ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹூ மற்றும் துணைத்தலைவர் தத்தா ஆகியோர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய, ஹூண்டாய் நிறுவன துணைத்தலைவர் தத்தா, மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளதாகவும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகும் என்றார். இந்த கூடுதல் முதலீடு காரணமாக, 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.