ஆதி திராவிட மாணவர்கள் கல்வி நிதியில் முறைகேடு புகார் - நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
ஆதிதிராவிட மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறைகேடு தொடர்பாக பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி உதவித் திட்ட நிதியை அதிகாரிகள் கையாடல் செய்வதாக கூறி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவர், தனது மனுவில், தணிக்கை குழு அளித்த அறிக்கையில் 17 கோடியே 36 லட்சம் ரூபாய் கையாடல் நடந்ததாக கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக டிசம்பர் 10ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.