தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
நீலகிரி மாவட்டம் உதகையில் தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகையில் தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். தினத்தந்தி சார்பில் நீலகிரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவ - மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா மாணவர்கள் கடின உழைப்பால் மட்டுமே சாதனையாளர்கள் ஆக முடியும் என்று குறிப்பிட்டார்.