படகு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் - மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஆசிப் என்பவர் தனது படகு பதிவு சான்றை புதுப்பிக்கவும், டீசல் மானியம் வேண்டியும் கடலூர் மீன்வளத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்

Update: 2018-11-09 20:00 GMT
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச்  சேர்ந்த முகமது ஆசிப் என்பவர் தனது படகு பதிவு சான்றை புதுப்பிக்கவும், டீசல் மானியம் வேண்டியும்  கடலூர் மீன்வளத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனைப் பெற்றுக்கொண்ட கடலூர் மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் மனுநீதி சோழன்,   பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்ததை அடுத்து, துணை காவல் கண்காணிப்பாளர் மெல்வின் ராஜா சிங் தலைமையிலான  போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முகமது ஆசிப்பிடம் கொடுத்தனர். இதனை மனுநீதி சோழன் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து, அவரது அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீசார் ஆவணங்களை கைப்பற்றினர்.
Tags:    

மேலும் செய்திகள்