சிறப்பு பேருந்துகள் மூலம் 7,37,481 பேர் பயணம் : அரசு விரைவு போக்குவரத்து கழகம்

தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 7 லட்சத்து 37 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Update: 2018-11-07 13:10 GMT
* தீபாவளியையொட்டி கடந்த 2 ந்தேதி முதல் 5ந்தேதி வரை சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 13ஆயிரத்து 563 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகஅரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

* கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 7 ஆயிரத்து 197 பேருந்துகளும், மாதாவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 954 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* இதேபோல் கே.கே. நகர், தாம்பரம் சானிடேரியம், இரயில்நிலையம், பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டை விட கூடுதலாக 2 ஆயிரத்து 570 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* சென்னையிலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 7 லட்சத்து 37 ஆயிரத்து 481 பயணம் செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு 1 லட்சத்து 84 ஆயிரத்து 857 பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* தமிழகம் முழுவதும் நாளை வரை 1 லட்சத்து 62 ஆயிரத்து 252 பயணிகள் முன் பதிவு செய்துள்ளதாகவும் , இதன் மூலம் 7 கோடியே 63 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்