ஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர். முறையான அனுமதி பெற்றிருப்பதால் அதிகாரிகள் போர்டுகளை அகற்றக் கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதி ரசீதை காண்பித்ததும், அதிகாரிகள் ப்ளக்ஸ் போர்டுகளை திரும்ப வைத்து விட்டு சென்றனர்.