சொத்து வரியை குறைக்க கோரி நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி விதிப்பில் மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய, நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர், திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்து வரி விதிப்பில் மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய, நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர், திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போயஸ் தோட்டம், பெசன்ட் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சதுர அடிக்கு ரூபாய் 1 ரூபாய் 90 காசுகள் மட்டுமே சொத்துவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், திருவொற்றியூர் பகுதிக்கு மட்டும் சதுர அடிக்கு 2 ரூபாய் 20 காசுகள் முதல் 4 ரூபாய் 15 காசுகள் வரை சொத்து வரி வசூலிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.