மாணவர்களுக்கு 'தினத்தந்தி' கல்வி உதவித் தொகை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

Update: 2018-11-01 09:19 GMT
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று பொருளாதாரத்தில் பின் தங்கிய நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த  மாணவ, மாணவிகளுக்கு தினத்தந்தி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. நெல்லை டவுணில் உள்ள கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில், 20 பேருக்கு தலா 10,000 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்பட்டது. உதவி தொகையை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் வழங்கினார். விழாவில் நெல்லை மாவட்ட கல்வி அதிகாரி பாலா மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்