"டீசலுக்கு மானியத்துடன் கடன்" - குவிந்த வாகன ஓட்டிகள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டீசலுக்கு கடன் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2018-10-27 13:59 GMT
* நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டீசலுக்கு கடன் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் நிதி நிறுவனம் ஒன்று தங்களிடம் கடன் பெற்று வாகனங்களை பெற்ற வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையினை அளித்துள்ளது. 

* டீசலுக்கு 85 பைசா மானியத்துடன் கூடிய கடனை வாடிக்கையாளர்கள் தங்கள் மாத தவணையுடன் சேர்த்துக் கட்ட வேண்டும். 

* மானிய விலை கடன் உதவியுடன் குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில் டீசலை பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

* இது பற்றி அறிந்ததும்  பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் கூட்டம் அதிகரித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்