ராஜராஜ சோழனின் 1033 வது ஆண்டு சதய விழா : மங்கள இசையுடன் தொடங்கியது
தஞ்சை பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033-வது ஆண்டு சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியுள்ளது.
தஞ்சை பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033-வது ஆண்டு சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாமன்னர் ராஜ ராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.60ஆண்டுகளுக்கு பிறகு, 150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகள் மீட்கப்பட்ட நிலையில், இம்முறை விழா சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.